Regional02

பல்ஸ் ஆக்சிமீட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் : உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பேசுகையில், “ நமது உடலின் ஆக்ஸிஜன் அளவைக் கண்டறியும் பல்ஸ் ஆக்சி மீட்டரின்விலை ரூ.1,000 இருக்கும். மக்கள் அவற்றைவாங்கி வைத்துக் கொண்டு ஆக்சிஜன் அளவு அறிந்து கொண்டால் நோயின் தன்மையை உடனடியாக அறிந்து, அதற்கேற்ற வகையில் செயல்படலாம். என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் கவுதம சிகாமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தா.உதயசூரியன்,ஏ.ஜே.மணிக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT