Regional01

கரோனா தொற்று முழு ஊரடங்கால் காமராசர் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு :

செய்திப்பிரிவு

இக்கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பருவத் தேர்வுகள் மே மாதம் 5-ம் தேதி தொடங்கியது. கரோனா தொற்று பரவலைத் தவிர்க்கும் வகையில் மாணவ, மாணவியர் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் தேர்வுகளை எழுதினர். தேர்வுகள் ஜூன் முதல் வாரம் வரை நடத்த கால அட்டவணை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் நடைபெறும் பருவத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT