Regional02

பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி - பொது மேலாளருடன் அமைச்சர்கள் சந்திப்பு :

செய்திப்பிரிவு

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சி ஜன் உற்பத்தியை தொடங்குவது தொடர்பாக ஆலை பொது மேலாளரை அமைச்சர்கள் நேற்று சந் தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மீண் டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து திருச்சி பெல் நிறுவனத்தின் பொது மேலாளர் மற்றும் தலைவர் டி.எஸ்.முரளியு டன் தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதில், பல ஆண்டுகளுக்கு மேலாக ஆக்சிஜன் உற்பத்தி பிரிவு செயல்படாததால் அதை மீண்டும் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அமைச்சர்களிடம் பெல் பொது மேலாளர் எடுத்துரைத்துள்ளார். அப்போது, அந்த பிரிவில் உள்ள இயந்திரங்களை பழுது நீக்கி மீண்டும் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும் அமைச்சர்கள் மற்றும் பெல் பொது மேலாளர் ஆகியோர் பேசியுள்ளனர்.

மிகவும் பழமையான இயந்திரத்தை மீண்டும் சீர்படுத்தி இயக்கு வதில் உள்ள பிரச்சினைகள், அதற்கு தேவைப்படும் காலம் ஆகியவை குறித்தும் விவாதிக் கப்பட்டுள்ளது. இந்த பிரிவை சீர்படுத்தி, மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கு 4 மாதத்துக்கு மேலாகும் என பெல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இறுதியாக என்ன முடிவு செய்யப்பட்டது என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இந்த சந்திப்பின் போது மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT