பாளையங்கோட்டை காந்திமதியம்மன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம். 
Regional01

பாளை.யில் 100 படுக்கைகளுடன் புதிய மையம் :

செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு காந்திமதியம்மன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, 100 படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை, மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ரூர்கேலாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். அப்துல் வகாப் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, சார் ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் நிறைமதி, மாவட்ட தொழில்மைய மேலாளர் முருகேசன், சிப்காட் அலுவலக உதவி மேலாளர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT