Regional01

கடையநல்லூரில் எம்எல்ஏ ஆய்வு :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ ஆலோசனை நடத்தினார். பின்னர், ஊரடங்கு காலம் முழுவதும் அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்க ரூ.30 ஆயிரம் தொகையை நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனிடம் வழங்கினார்.

அப்போது சுகாதார அலுவலர் நாராயணன், இளநிலை பொறியாளர் முரளி, சுகாதார ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி, அதிமுக நகரச் செயலாளர் முருகன், முன்னாள் நகரச் செயலாளர் கிட்டு ராஜா உட்பட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT