Regional01

நோன்பு பெருநாளிலும் நல்லடக்கப் பணி :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தன்னார்வலர்கள் கரோனா 2-ம் அலையில் உயிரிழந்த 80 பேரின் சடலங்களை நல்லடக்கம் மற்றும் தகனம்செய்துள்ளனர். நோன்பு பெருநாளான நேற்றும் இப்பணிகள் தொடர்ந்தன.திருநெல்வேலி மாவட்டம் உவரி, தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியைச் சேர்ந்த இருவர் கரோனாவுக்கு நேற்று உயிரிழந்தனர். அவர்களது சடலங்களை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தன்னார்வலர்கள் பெற்று நல்லடக்கம் செய்தனர்.

SCROLL FOR NEXT