தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட 4.8 டன் எடையுள்ள திரவ ஆக்சிஜன் முதன்முதலாக நேற்று காலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
கரோனா தொற்றின் 2-வது அலையால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதால் மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதைக் கருத் தில் கொண்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற் பத்தி நிலையத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளித்து, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 27-ம் தேதி தீர்ப்பளித்தது. தமிழக அரசும் இதற்கான அனைத்து அனுமதிகளையும் வழங்கியது.
அங்கு ஒரு வாரமாக பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்பேரில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையிலான 7 பேர் அடங்கிய கண்காணிப்புக் குழுவினர், அங்கு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இரவில் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. 4.8 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. இதை ஏற்றிக் கொண்டு முதலாவது டேங்கர் லாரி நேற்று காலை 7.10 மணியளவில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. லாரியை ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
98.6% தூய்மையானது
ஸ்டெர்லைட் நன்றி
ஸ்டெர்லைட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் கூறும்போது, ‘‘ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத் தியை தடையின்றி மேற்கொள்ள அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்” என்றார்.
திருநெல்வேலி