கடலூர் சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட தொழிற்சாலை. 
TNadu

கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் - பாய்லர் வெடித்து 4 பேர் உயிரிழப்பு: 13 தொழிலாளர் படுகாயம் :

செய்திப்பிரிவு

கடலூர் சிப்காட்டில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து 4 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர் சிப்காட்டில் ‘கிரிம்ஸன் ஆர்கானிக்’ என்ற ரசாயனம் உற்பத்தி செய்யும் நிறுவனம் உள்ளது.இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். நேற்று காலையில்இந்நிறுவனத்தில் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக பாய்லர் வெடித்தது.

இதில் கடலூர் பழைய வண்டிப்பாளையம் ராஜ்குமார்(45), செம்மங்குப்பம் கணபதி (25), காரைக்காடு சவீதா(35), விசோஸ்ராஜ்(26) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, மேலும் படுகாயமடைந்த சத்தியமூர்த்தி, மணிகண்டன், சபரி, ராம்குமார், செல்வி, வினோத்குமார் உட்பட 13 பேரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

விபத்து குறித்து தகவலறிந்த தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அமைச்சர்விபத்து நடைபெற்ற தொழிற்சாலை பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில் தொழிற்சாலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் அந்நிறுவனத்தின் முன்பு மறியல் நடைபெற்றது. மேலும் இந்த விபத்து குறித்து கடலூர் சிப்காட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்வர் நிதியுதவி

SCROLL FOR NEXT