செந்தமிழன் 
TNadu

சீமான் தந்தை செந்தமிழன் காலமானார் : இளையான்குடி அருகே இன்று உடல் அடக்கம்

செய்திப்பிரிவு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை நேற்று பிற்பகல் காலமானார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செபஸ்தியான் (எ) செந்தமிழன் (90). இவர் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூரில் வசித்து வந்தார். விவசாயியான இவர் வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு அவர் காலமானார். அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. செபஸ்தியானுக்கு அன்னம்மாள் (76) என்ற மனைவியும், மரியநாயகம், சீமான், இளையதம்பி ஆகிய 3 மகன்களும், அருளாயி, அன்பரசி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

முதல்வர் இரங்கல்

SCROLL FOR NEXT