Regional02

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 42 நாட்களில் - கரோனா தொற்றுக்கு 33 பேர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 42 நாட்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கரோனாதொற்று பரவ தொடங்கியபோது, தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்தது. மே மாதத்துக்கு பின்னர் படிப்படியாக தொற்று பரவத்தொடங்கி கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், கடந்த மார்ச் 14-ம் தேதி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5-ஆக இருந்தது. தொடர்ந்து தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி மார்ச் 31-ம் தேதி மொத்தம் 8 ஆயிரத்து 468 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 8 ஆயிரத்து 204 பேர் குணமடைந்தனர். உயிரிழப்பு 119-ஆக இருந்தது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மே 12-ம் தேதி வரை 42 நாட்களில் மாவட் டத்தில் கரோனாவால் 10 ஆயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டனர். 33 பேர் உயிரிழந்தனர். தற்போது, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 20 ஆயிரத்து 235 ஆக உயந்துள்ளது. 16,355 பேர் குணமடைந்துள்ளனர். 152 பேர் உயிரிழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 250 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT