முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷிடம், தனது சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவி முத்துலட்சுமி. 
Regional02

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு - தனது கல்விக்காக சேமித்த பணத்தை வழங்கிய மாணவி :

செய்திப்பிரிவு

தனது கல்விக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை அரசுப் பள்ளி மாணவி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங் கினார்.

கரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் நிதி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து, பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் சந்தாபுரம் ஊராட்சி பூமாலை நகரைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் முத்துலட்சுமி. இவர் நெடுங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக தனது கல்விக்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த 4,100 ரூபாயை முதல்வர் பொது நிவாரண நிதிக்காக கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷிடம் வழங்கினார்.

SCROLL FOR NEXT