Regional01

மக்கள் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: எம்எல்ஏ :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி திமுக எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், எம்எல்ஏவாக பதவியேற்ற பின்பு, ஜெயங்கொண்டத்துக்கு நேற்று வந்தார். ஆண்டிமடத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் தந்தையும், முன் னாள் எம்.பியுமான மறைந்த சிவசுப்பிரமணியனின் படத்துக்கும், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள பெரியார், அண்ணா, அம்பேத் கர் சிலைகளுக்கும் மாலை அணிவித்த அவர், பின்னர் கூறியது:

எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் மக்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்யவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மக்கள் தங்களின் பிரச்சினைகளை என்னிடம் நேரிலோ, கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம். அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்றார்.

SCROLL FOR NEXT