திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை கோகுல் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் முத்துகிருஷ்ணன் (35), சேரன்மகாதேவி செல்வி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த அண்ணாத்துரை மகன் சிதம்பர செல்வம் (25) ஆகியோர் நேற்று முன்தினம் இரவில் திருநெல்வேலிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு, ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
தருவை ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது எதிரேவந்த காரும், மோட்டார் சைக்கிளும் மோதின. இதில் பலத்த காயமடைந்த முத்துகிருஷ்ணனும், சிதம்பர செல்வமும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் நேற்று உயிரிழந்தனர். முன்னீர்பள்ளம் போலீஸார் விசாரிக்கின்றனர்.