Regional02

கரோனா தொற்று சிகிச்சைக்கு சென்ற தம்பதியின் வீட்டில் 8 பவுன் திருட்டு :

செய்திப்பிரிவு

திருப்பூர் சொர்ணபுரி கிரீன்லேண்ட் பகுதியில் வசித்து வருபவர் விமல்குமார். இவரது மனைவி திவ்யா. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தம்பதி, கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு, வீட்டைப் பூட்டிவிட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் காலம் முடிந்து, கடந்த 11-ம் தேதி வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த 4 பவுன் தங்க நாணயம்உட்பட 8 பவுன் நகையும், வெள்ளிக் கொலுசுமற்றும் வீட்டு சமையல் அடுப்பு, சிலிண்டர்உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருப்பதுதெரியவந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில், 15 வேலம்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT