Regional01

சேலத்தில் 5,355 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு :

செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சி பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 5,355 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சேலம் மாநகராட்சி உட்பட்ட பகுதியில் 1,647 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 5,355 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி, கள பணியாளர்களின் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், தொற்றின் இரண்டாம் அலைக்கு இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது பரவி வரும் கரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால், 3 முதல் 7 பேர் வரை பரவி வருகிறது. கரோனா தடுப்பு பணியில் 1,200 கள பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வீடு, வீடாகச் சென்று கரோனா அறிகுறி கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநகராட்சி பகுதிகளில் 72 இடங்களில் கரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் கபசுரக் குடிநீர், ஆர்சானிக் ஆல்ஃபா மாத்திரை, மல்டி விட்டமின், ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT