Regional02

செஞ்சி அருகே புகையிலை பதுக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது :

செய்திப்பிரிவு

கடந்த ஏப்ரல் மாதம் செஞ்சி அருகே அப்பம்பட்டு கடைவீதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக சுந்தரமூர்த்தி என்பவர் அனந்தபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு செஞ்சி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு ஆட்சியருக்கு விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து ஆட்சியர் அண்ணாதுரை குண்டர் சட்டத்தில் சுந்தரமூர்த்தியை கைது செய்ய உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT