சந்திரசேகர் சாகமூரி 
Regional02

கடலூர் ஆட்சியருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாமூரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தொடர்ந்து அலுவலக பணியிலும் மற்றும் கரோனா களப்பணியிலும் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் (மே.11) உடல் சோர்வு உள்ளிட்ட சில அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து, அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில், தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தலின் பேரில், தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவம் பெற்று வருகிறார்.

SCROLL FOR NEXT