தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவரான கனிமொழி எம்.பி. நேற்று காலை திடீரென விமான நிலையத்துக்கு வந்தார். அவரை விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம் செய்யும் பணிகள், இரவில் விமானங்கள் தரையிறங்குவதற்காக செய்யப்பட்டுள்ள வசதிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள், புதிய பயணிகள் முனைய கட்டிட பணிகள், சிக்னல் கட்டிட பணிகள், புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கும் பணிகள், வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், பணிகள் நடைபெறும் பகுதிகளை ஆய்வு செய்தார். விமான நிலைய மேலாளர் எஸ்.ஜெயராமன் உடனிருந்தார்.