தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோரின் அறிவுறுத்தல்படி, ரங்கம் ரங்கநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் பொதுமக் களுக்கு நேற்று முகக்கவசம், கபசுர குடிநீர், உணவுப் பொட்டலங்கள் ஆகியன வழங்கப்பட்டன.
கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து தலைமையில் ரங்கா ரங்கா கோபுரம் நுழைவு வாயில் அருகில், பொதுமக்கள் 100 பேருக்கு முகக்கவசமும், 200 பேருக்கு கபசுர குடிநீரும், 440 பேருக்கு உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து, ரங் கம் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சையில் உள்ளோர் மற்றும் அவர்களுடன் உடனிருப்போர் என இரு இடங்களிலும் தலா 100 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
இதேபோல, ரங்கம் கோயி லின் சார்பு கோயில்களான உறையூர் நாச்சியார் கோயில், திருவெள் ளறை புண்டரீகாட்சப் பெருமாள் கோயில், அன்பில் மாரியம்மன் கோயில் ஆகியவற்றின் சார்பில் தலா 50 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் நேற்று வழங்கப் பட்டன.
பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர், உணவுப் பொட்டலங்கள் ஆகியவை வழங்கும் பணிகள் தினமும் மேற்கொள் ளப்படும் என ரங்கம் கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.
சமயபுரம் கோயில் சார்பில்...
இந்த நிகழ்வில் கோயில் இணை ஆணையர் கல்யாணி, மேலாளர் லட்சுமணன் மற்றும் கோயில் ஊழியர்கள் உடனிருந்தனர்.
கும்பகோணத்தில்...
கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இதேபோல, திருநாகேஸ் வரத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோயில் சார்பில் கும்பகோணம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 300 பேருக்கு உணவுப் பொட்டலங்களை அற நிலையத்துறை இணை ஆணையர் இளையராஜா வழங்கினார்.