Regional01

வீடுதோறும் உடல் வெப்பநிலை பரிசோதனை : ஒத்துழைப்பு அளிக்க ஆட்சியர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் குழுதன்னார்வலர்கள் வீடு வீடாகச்சென்று, கரோனா தொற்று அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அறியும் சோதனை மேற்கொள்கிறார்கள். இச்சோதனைகள் இருப்பிடத்திலேயே நடத்தப்பட்டு மருத்துவ பெட்டகங்கள் வழங்குவதோடு, மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படும்.

மேலும், தேவைப்பட்டால் அரசு மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை சிறப்பு மையங்களுக்கு செல்வதற்கும் உதவிபுரிகின்றனர். வீடு வீடாக சென்று உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளவரும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.தற்போது, முழுஊரடங்கு அமலில்இருக்கும் நிலையில் பொதுமக்கள்அவசியமின்றி வெளியே வருவதைதவிர்க்க வேண்டும் ஊரடங்குதளர்வு நேரத்தில் அத்தியாவசியதேவைக்காக வெளியே வருவோர் முகக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளியை பின்பற்றி, தொற்றை தடுப்பது தொடர்பானஅரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT