Regional02

ஒப்பந்த அடிப்படையில் - மருத்துவர், செவிலியர்கள் நியமனம் :

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பணிக்காக மருத்துவப்படிப்பு முடித்தவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புநர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படை யில் நியமிக்க உள்ளனர் என ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை எதிர்பாராத வகையில் நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், மருத்துவர் களின் தேவையும் அதிகரித்து வருகிறது. எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவம் முடித்தவர்கள், மருத்துவம் படித்து முதுநிலை மருத்துவம் படிப்புக்காக காத்திருப்போர் மற்றும் ஓய்வுபெற்ற மருத்துவர் கள், தகுதி பெற்ற செவிலியர்கள், ஆய்வகநுட்புநர் மற்றும் புள்ளி விவர பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் ஒப்பந்த அடிப் படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்தப் பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) அலுவலகம், ஏ.25, எமரால்டு நகர், சிப்காட், ராணிப்பேட்டை-1 என்ற முகவரியில் அணுகலாம். அல்லது 94434-69895 அல்லது 04172-273188, 273166, 273170, 273193, 273192, 273191 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT