Regional02

சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு :

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்ட அளவில் காவல் கண்காணிப்பாளருக்கு உதவும் வகையில், சட்ட ஆலோசகர் நியமிக்கப்பட உள்ளார். இந்தபணியிடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலையுடன் சட்டப் படிப்பு அல்லது ஐந்தாண்டு சட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலில் பதிவு செய்து, சட்ட அனுபவம், குற்றவியல் மத்திய தீர்ப்பாயம் அல்லது மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர், குற்ற வழக்கு எதிலும் சம்பந்தப்பட்டிருக்க கூடாது.

தேர்வு செய்யப்படும் சட்டஆலோசகருக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு, பணித் திறனுக்கேற்ப காலநீட்டிப்பு வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் வரும் 15-ம்தேதிக்குள், அலுவலக வேலைநாட்களில் நேரில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT