Regional04

வீட்டுத் தனிமையில் இருப்போருக்கு - ஸத்ய சாய் சேவா அமைப்பு இலவச மதிய உணவு :

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் ஸத்ய சாய் சேவா அமைப்பு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு  ஸத்ய சாய் சேவா அமைப்பின் சார்பில் ‘ சாய் அமுதம்’ எனும் 7 நாட்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, ராம்நகர், கோட்டையூர், தேவ கோட்டை, சிவகங்கை, மானா மதுரை ஆகிய இடங்களில் இச்சேவை அளிக்கப்படுகிறது.

காரைக்குடி 9443130431, 9942768157, ராம்நகர் மற்றும் கோட்டையூர் 9500786051, தேவகோட்டை 8148258860, சிவ கங்கை 9788540253, மானாமதுரை 9488741532, 9940966078 ஆகிய மொபைல் போன் எண்களில் ஒரு நாள் முன்னதாக தொடர்பு கொண்டு தெரிவித்தால் அடுத்த நாள் முதல் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT