Regional04

கீழச்சிவல்பட்டி ஊராட்சியில் - கபசுரப் பொடி, முகக்கவசம் வழங்கல் :

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி ஊராட்சி சார்பில் கரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்களப் பணியாளர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான முகக்கவசம் மற்றும் சானிடைசர், கபசுரப் பொடி வழங்கப்பட்டன.

ஊராட்சித் தலைவர் நாகமணிஅழகுமணிகண்டன் தலைமை வகித்தார். திருப்பத்தூர் சமூக நலத்திட்ட வட்டாட்சியர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார். ஆர்.எம்.மெய்யப்பச்செட்டியார் கல்விக் குழுமத் தலைவர் எஸ்.எம்.பழனியப்பன் வரவேற்றார். இதில், வருவாய் ஆய்வாளர் லெட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் தர்மராஜ், விக்னேஷ், செல்வமணி, சுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT