தூத்துக்குடி மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். கரோனாதடுப்பு பணிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர்அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் கரோனா வார்டு அமைப்பது தொடர்பாக தலைமை மருத்துவ அலுவலர் பொன் ரவியுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து திருச்செந்தூர் ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ சென்னையில் 53 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனால்தூத்துக்குடி மாவட்டத்தில் 10 சதவீதம் பேர் கூட இன்னும் கரோனாதடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. பொதுமக்களிடம் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லை. மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். என்றார் அவர்.