கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக திருச்சியில் உள்ள பெல் தொழிற்சாலைக்கு மே 23-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெல் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மே 8 முதல் 10-ம் தேதி வரை இந்நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனிடையே, கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் பெல் நிறுவனத்துக்கு மே 23-ம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து பெல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி பெல் தொழிற்சாலையில் ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவசர மற்றும் அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் தேவையான தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வர வேண்டும் என்றும், மற்ற ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு பெல் நிர்வாகம் தகவல் அனுப்பியுள்ளது.