பேராவூரணி எம்எல்ஏ அலுவலகத்துக்கு வெளிர் மஞ்சள் வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர். 
Regional02

பேராவூரணி எம்எல்ஏ அலுவலகத்துக்கு புதிய வண்ணம் :

செய்திப்பிரிவு

பேராவூரணி எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு, கட்டிடத்துக்கு புதிய வண்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பேராவூரணி சட்டப் பேரவைத் தொகுதி உறுப் பினராக திமுகவைச் சேர்ந்த என்.அசோக்குமார் தேர்வு செய் யப்பட்டார். இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பூட்டப்பட் டிருந்த, பேராவூரணி எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்பட்டு, அங்கு பொதுப்பணித் துறை அலுவலர்கள் மேற்பார்வையில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த அலுவலகம் கடந்த அதிமுக ஆட்சியின்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு பிடித்ததாக கூறப்படும் பச்சை வண்ணத்தில் இருந்தது. தற்போது இந்த அலுவலகம் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாறி உள்ளது.

SCROLL FOR NEXT