Regional04

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிதியுதவி : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020 - 2021 ஆம் நிதியாண்டில் மூன்றாம் பாலினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கு ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது. தகுதியுடைய மூன்றாம் பாலினத்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருப்பம் தெரிவிக்கும் தொழில் குறித்த திட்ட அறிக்கை, தொழில் குறித்த பயிற்சி பெற்றிருப்பின் அதன் விவரம், தொழில் முன் அனுபவம் குறித்த விவரம், ஆதார் அட்டை நகல், வாரிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல் போன்ற சான்றுகளுடன்

மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி, தொலைபேசி எண்: 0461 - 2325606 என்ற முகவரியில் 19.05.2021 அன்று மாலை 4 மணிக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT