சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலிடம் எம்பிக்கள் வழங்கிய ஆக்சிஜன் கருவிகளை ஒப்படைத்தார் காரைக்குடி தொகுதி எம்எல்ஏ எஸ்.மாங்குடி. 
Regional02

அரசு மருத்துவக் கல்லூரிக்கு சொந்த நிதியில் - ஆக்சிஜன் கருவிகள் வழங்கிய ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் :

செய்திப்பிரிவு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சொந்த நிதியில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் கருவிகளை வழங்கினர்.

கரோனா தொற்றுக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால், ஆக்சிஜன் கொடுக்கத் தேவையான கான் சென்ட்ரேட்டர்ஸ் எனும் 5 நவீன கருவிகளை எம்பிக்கள் சார்பில் காரைக்குடி எம்எல்ஏ எஸ். மாங் குடி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தின வேலிடம் வழங்கினார். மருத்துவக் கல்லூரி நிலைய அலுவலர் மீனாள் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

கன்சென்ட்ரேட்டர்ஸ் எனும் இக்கருவி சுற்றுப் புறத்தில் இருந்து காற்றை உறிஞ்சி தேவையில்லாத வாயுக்களை நீக்கி கரோனா நோயாளிகளுக்கு தேவையான தூய்மையான ஆக்சிஜனை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT