Regional01

ஈரோடு, நாமக்கல்லில் வாகன சோதனை 163 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை :

செய்திப்பிரிவு

ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் நடத்திய வாகனத் தணிக்கையில் விதிமுறைகளை மீறிய 18 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கினர்.

தமிழகம் முழுவதும் நேற்றுமுதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களிடம் தனியார் ஆம்னி பேருந்து இயக்குபவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக ஈரோடு மண்டலத்தில் உள்ள நாமக்கல் மற்றும் ஈரோடு வட்டாரப் போக்கு வரத்துத் துறையினர் கடந்த 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறை களை மீறிய 18 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், ஒரு ஆம்னி பேருந்து வரி செலுத்தாதற் காக முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சோதனையில் ரூ. 43 ஆயிரத்து 500 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. வரி செலுத்தாத வாகனத்திற்கு ரூ.72 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும், கார், வாடகை வாகனங்கள் உட்பட 163 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது, என ஈரோடு மண்டல வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT