சேலம் இரும்பாலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் நேற்று ரெம்டெசிவிர் மருந்து வாங்க சமூக இடைவெளி இன்றி நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள். படம்: எஸ்.குரு பிரசாத் 
Regional01

ரெம்டெசிவிர் மருந்து பெற டோக்கன் வழங்கல் :

செய்திப்பிரிவு

சேலம் அரசு மோகன்குமார மங்கலம் மருத்துவக் கல்லூரியில்ரெம்டெசிவிர் மருந்து வாங்ககாத்திருப்போருக்கு டோக்கன்வழங்குவது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து சேலம் இரும்பாலை அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் கடந்த 8-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால்,மருந்து விற்பனை செய்யப்பட வில்லை. இதனால், நேற்று மருந்து வாங்க நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் கல்லூரி வளாகத்தில் காத்திருந்தனர்.

அப்போது, சமூக இடை வெளியை பின்பற்றாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தினசரி 200 பேருக்கு மட்டுமே மருந்துவழங்கப்படுவதால், மருந்து கிடைக்காதவர்களுக்கு அடுத்த நாள் மருந்து பெற டோக்கன் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT