நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியில் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் “இயற்பியல் அறிவியலில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அயல்நாட்டு வாய்ப்புகள்” என்ற தலைப்பில் ஆன்லைன் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் பெ.முருகன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இயற்பியல் துறைத் தலைவர் பங்காரு வரவேற்றார். ரஷ்யாவின் சவுத் யூரல் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த ஆராய்ச்சியாளர் குருசங்கர் பங்கேற்று இயற்பியல் துறையில் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான அயல்நாட்டு வாய்ப்புகளைப் பட்டியலிட்டு விரிவாக பேசினார். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவயருக்கு இ-சான்றிதழ் வழங்கப்பட்டது. இயற்பியல்துறை பேராசிரியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.