Regional02

கரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் - அரசு செவிலியர்களுக்கு விடுதி வசதிக்கு கோரிக்கை :

செய்திப்பிரிவு

சேலம் அரசு மோகன்குமார மங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலியர்களுக்கு விடுதிகளில் தங்கும் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் அரசு மோகன்குமார மங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா சிகிச்சை பிரிவில் 6 மணி நேரம் சுழற்சி முறையில் தலா 80 செவிலியர்கள், 80 மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் உள்ள செவிலியர்கள் பணி முடிந்ததும் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்தாண்டு தொற்று பாதிப்பு காலத்தில் செவிலி யர்களுக்கு மூன்று விடுதிகளில் தங்க அறைகள் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

தற்போது, கரோனா 2-ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலியர்கள், பணி முடிந்ததும் அவரவர் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால், குடும்பத்தினருக்கு தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, கடந்தாண்டைபோல பணி முடிந்ததும் வீடுகளுக்கு செல்லாமல் தனி விடுதிகளில் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT