Regional02

கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 895 பேருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 895 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பிவிட்டன. இதனால் ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 895 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். 256 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 4 பேர் சிகிச்சை பலனில்லாமல் மருத்துவமனையில் உயிரிழந் தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151-ஆக உயர்ந்தது.

SCROLL FOR NEXT