தூத்துக்குடி மாவட்ட கரோனா கண்காணிப்பு அதிகாரியாக தமிழக கருவூல கணக்குத்துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 4 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார். ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு மையத்தை நேற்று அவர்ஆய்வு செய்தார்.
மாவட்டம் முழுவதும் உள்ள கரோனா நோயாளிகளை கண்காணித்தல் போன்ற பணிகளை இந்த கட்டுப்பாட்டு மையம் ஒருங்கிணைக்கிறது. இதுதொடர்பான விவரங்களை கண்காணிப்பு அதிகாரி கேட்டறிந்தார். ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உடனிருந்தனர்.