திருநெல்வேலி மாவட்டத்தில் 522 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டது. இதில் திருநெல்வேலி மாநகரில் மட்டும் 225 பேருக்கு பாதிப்பு உறுதியானது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:
அம்பாசமுத்திரம்- 34, சேரன்மகாதேவி- 15, களக்காடு- 37,மானூர்- 27, நாங்குநேரி- 29, பாளையங்கோட்டை- 78, பாப்பாகுடி- 5, ராதாபுரம்- 17, வள்ளியூர்- 55. ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தென்காசி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மட்டும் 800 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாகர்கோவில் வடசேரி பெரிய ராசிங்கன் தெரு,டதி அம்மாள் தெரு, பள்ளவிளை, கட்டயன்விளை, வடிவீஸ்வரம் மீனாட்சி கார்டன், தோப்பு வணிகர் தெரு, பறக்கை செட்டித்தெரு, எறும்புக்காடு வில்லியம் நகர் ஆகியஇடங்களில் தடுப்புகள் அமைத்துமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெட்டூர்ணிமடம் பி.கே.சி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோரை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி