திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு கபசுர குடிநீர் சூரணம் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் காவல்துறையினருக்கு முகக்கவசம், கிருமி நாசினி, சானிடைசர், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் ஆகியவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கபசுர குடிநீர் சூரணத்தைகாவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், காவல்துறையினருக்கு நேற்று வழங்கினார். திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா, சேரன்மகாதேவி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். `முகக்கவசம் கட்டாயம் அணிந் தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பணியில் ஈடுபடவேண்டும்’ என, காவல்துறையினரை எஸ்.பி. அறிவுறுத்தினார்.