Regional01

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முடிவு :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரனை, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தென்காசி மாவட்டத் தலைவர் லுக்மான் ஹக்கீம், செயலாளர் அப்துல் பாஸித், மக்கள் தொடர்பாளர் திவான் ஒலி ஆகியோர் சந்தித்தனர்.

இதுகுறித்து, நிர்வாகிகள் கூறியதாவது:

மாவட்ட செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி கரோனா தடுப்புப் பணியில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்வது. அரசு மேற்கொண்டு வரும் அனைத்து விதமான தடுப்புநடவடிக்கையிலும் பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தன்னார்வ குழு இணைந்து செயல்படுவது. நோயாளிகளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி, படுக்கைவசதி மற்றும் ஆக்ஸிஜன் வசதி ஏற்பாடு செய்வது. தொற்று நோயால் இறந்த நபர்களை அவர்களின் மத அடிப்படையில் அடக்கம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட தயாராக இருப்பதாக, ஆட்சியரிடம் கூறியுள்ளதாக, அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT