Regional02

ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் தி.மலை மாவட்டத்தில் - ரூ.61 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை :

செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மற்றும்தி.மலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.61 கோடியே 10 லட்சத்துக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் 24-ம் தேதி வரைமுழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. நேற்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஊரடங்கின் ஒரு பகுதியாக டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதால், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கூட்டம் அதிகளவில் திரண்டு மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக வாங்கிச் சென்றனர்.

வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கடந்த 8 மற்றும் 9-ம் தேதிகளில் ரூ.36 கோடியே 10 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.

திருவண்ணாமலை

SCROLL FOR NEXT