Regional03

மடிக்கணினி பரிசு கிடைத்திருப்பதாக கூறி - தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4.18 லட்சம் மோசடி :

செய்திப்பிரிவு

மடிக்கணினி பரிசு கிடைத்திருப்பதாக கூறி ஓசூரில் தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4.18 லட்சத்தை எடுத்த மர்ம நபர் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் மத்திகிரி பகுதியைச் சேர்ந்தவர்சுந்தர் ராம் (45). இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனக்கு தேவையான பொருட்களைஆன்லைன் முறையில் அடிக்கடி வாங்கும் வழக்கம் கொண்டவர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், “தங்களுக்கு மடிக்கணினி பரிசாத கிடைத்துள்ளது. அதைப் பெற்றுக் கொள்ள ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணத்தை செலுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

இதை நம்பிய சுந்தர் ராம், தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்தியுள்ளார். இதை பயன்படுத்தி சுந்தர் ராமின் வங்கிக் கணக்கு விவரங்களை அறிந்து கொண்ட மர்ம நபர் சுந்தர் ராமின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்து 567 எடுத்துள்ளார். மேலும், அவருக்கு மடிக்கணினியும் அனுப்பவில்லை.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தர் ராம் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் க்ரைம் பிரிவில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT