கிருஷ்ணகிரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி கட்டிகானப் பள்ளியைச் சேர்ந்தவர் ரஹ்மான் செரீப் (65). இவர் ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பர்வீன் (60). இவர்களின் மகன் தோபிக் ஷெரீப் (33). இவர்கள் மூவருக்கும் சில தினங்களுக்கு முன்னர் சளி, காய்ச்சல், இருமல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, மூவருக்கு நடந்த கரோனா பரிசோதனையில் மூவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க் கப்பட்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ரஹ்மான் ஷெரீப் உயிரிழந்தார். தொடர்ந்து, நேற்று முன்தினம் பர்வீன், தோபிக் ஷெரீப் ஆகியோர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த நிகழ்வு அவர்களது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத் தியுள்ளது.