Regional01

கடலூர் மாவட்டத்தில் கரோனா நிவாரண நிதி திட்டத்தில் - 7.35 லட்சம் குடும்பங்கள் பயனடையும் : இன்று முதல் டோக்கன் விநியோகம்

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் இன்று முதல் கரோனா நிவாரணம் பெற வீடு, வீடாக டோக்கன் வழங்கப்படுகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, கரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக இந்த மாதம் ரூ.2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதற்காக கடலூர் மாவட்டத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முதல் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் பணத்தைச் சென்று பெற்றுக்கொள்ள வேண்டிய தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும். ரேஷன் அட்டைதாரரின் குடும்பத்தில் யார் வேண்டுமானாலும் ரேஷன் கடைக்குச் சென்று பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

வரும் 15-ம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலமாக தினந்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்தப் பணம் வழங்கப்படும். ஒரு நாளைக்கு 200 அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்படும். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் சுமார் 7.35 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தப் பணம் வழங்கப்பட உள்ளது.

கரோனா பரவல் அதிகம் உள்ள நிலையில், பொதுமக்கள் தேவையில்லாமல் ரேஷன் கடைகளுக்குச் செல்ல வேண்டாம். அவரவர் வீடு தேடியே டோக்கன் வரும். அதிலுள்ள நாளில் ரேஷன் கடைக்குச் சென்று பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT