Regional01

திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு லயன்ஸ் சங்கம் உதவி :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு மதர் தெரசா லயன்ஸ் சங்கத் தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் ராஜகுமார், பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரோனா நோயாளிகள் பயன்பெறும் வகையில், ஒரு லட்சம் மதிப்பிலான 25 கட்டில்களை பழநி எம்.எல்.ஏ., இ.பெ.செந்தில்குமார் வழங்க, மருத்துவமனை நிலைய மருத்துவர் ரவீந்திரன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், லயன்ஸ் மாவட்டத் தலைவர் சாமி, சமூக ஆர்வலர் காஜாமைதீன், செவிலியர் கண்காணிப்பாளர் மகாலட்சுமி, லயன்ஸ் சங்க நிர்வாகிகள் வில்லியம்ஸ், செபாஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT