Regional01

தடையின்றி ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

ஞாயிறு விடுமுறை என்பதால், நேற்று சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்படவில்லை. அனைத்து நாட்களிலும் மருந்து தடையின்றி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரைப்படி ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டதால், சென்னையைத் தொடர்ந்து சேலம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. சேலம் சர்க்கார் கொல்லப் பட்டியில் உள்ள சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் விற்பனை நேற்று முன்தினம் தொடங்கியது.

இங்கு மருந்து வாங்க சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரிஉள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் உறவினர் கள் வருகின்றனர்.

நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால், டெம்டெசிவிர் மருந்து விற்பனை இல்லை. இதனால், மருந்து வாங்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுதொடர்பாக அவர்கள்கூறும்போது, “கரோனா தொற்றி னால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் அபாய கட்டத்தில் உள்ள நிலையில், ஞாயிறு விடுமுறை என்பதால் மருந்து விற்பனை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், வரும் நாட்களில் தடையின்றி அனைத்து நாட்களிலும் மருந்து விற்பனைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதனிடையே, சேலம் ஆட்சியருக்கு, பாஜக சேலம் மேற்கு மாவட்ட பார்வையாளர் கோபிநாத் அனுப்பியுள்ள மனுவில், “ சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து தடை யில்லாமல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT