சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 639 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனைகளின் படி, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 344 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. நகராட்சிகளில் ஆத்தூரில் 16 நபர்கள், மேட்டூரில் 14 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப் பட்டது. மேலும், வட்டாரங்களில், ஓமலூர் 46, வீரபாண்டி 36, அயோத்தியாப்பட்டணம் 22, பனமரத்துப்பட்டி 23, காடையாம்பட்டி 15, சேலம் 16, சங்ககிரி 14, நங்க வள்ளி 17, மேச்சேரி 18, தலைவாசல் 10, எடப்பாடி 6, கொங்கணாபுரம் 5, மகுடஞ்சாவடி 9, தாரமங்கலம் 8, ஆத்தூர் 5, கெங்கவல்லி 4, பெத்தநாயக்கன்பாளையம் 1, வாழப்பாடி 7, ஏற்காட்டில் ஒருவர் என மாவட்டம் முழுவதும் 639 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதனிடையே, மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்த 762 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 423 நபர்கள் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.