சூளகிரி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த காமன்தொட்டி கோட்டகுண்டா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சாமப்பா (65). மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் நேற்று முன்தினம் கோபசந்திரம்-பாத்தகோட்டா சாலை யில் தென்பெணணை ஆற்று பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் பாலத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத் திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக சூளகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.