திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் அனைத்தும் இன்று (மே 10) முதல் மே 24-ம் தேதி வரை செயல்படாது என அறிவிக் கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளது:
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. எனவே, திருச்சி மரக்கடை பகுதியில் இயங்கி வரும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், அதன் கட்டுப்பாட்டில் தஞ்சாவூர், திருச்சியில் இயங்கி வரும் பாஸ்போர்ட் சேவை மையங்கள், கடலூர், பெரம்பலூர், சீர்காழி, திருத்துறைப்பூண்டி, காரைக்கால் உள்ளிட்ட அஞ்சலகங்களில் இயங்கிவரும் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் அனைத்தும் இன்று (மே 10) முதல் மே 24-ம் தேதி வரை செயல்படாது.
இந்த நாட்களில் சேவை பெற விண்ணப்பித்திருந்தவர்கள், தங்களது முன்பதிவு நேரத்தை மாற்றியமைத்துக் கொள்ளலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்கள், பொது விசாரணை, விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, காவல்துறை விசாரணை அறிக்கை குறித்த தகவல்களுக்கு 1800-258-1800 என்ற கட்டணமில்லா எண்ணிலோ, 0431-2707203, 2707404 ஆகிய தொலைபேசி எண்களிலோ, 75985 07203 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது rpo.trichy@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.