மத்திய மண்டலத்தில் நேற்று ஒரேநாளில் கரோனா தொற்றாளர்கள் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் 813 பேருக்கும், தஞ்சாவூரில் 897 பேருக்கும், திருவாரூரில் 302 பேருக்கும், நாகையில் 211 பேருக்கும், கரூரில் 291 பேருக்கும், புதுக்கோட்டையில் 236 பேருக்கும், பெரம்பலூரில் 141 பேருக்கும், அரிய லூரில் 112 பேருக்கும் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சி மாவட்டத்தில் 625 பேர், கரூரில் 224, திருவாரூரில் 271, தஞ்சாவூரில் 428, நாகையில் 170, புதுக்கோட்டையில் 166, பெரம்பலூரில் 36, அரியலூரில் 86 என 2006 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
26 பேர் உயிரிழப்பு