Regional01

திருச்சியில் காவல் நிலையத்துக்கு அருகே - வழக்கறிஞர் வெட்டிக் கொலை :

செய்திப்பிரிவு

திருச்சியில் காவல் நிலையத்துக்கு அருகே நேற்று வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருச்சி பாலக்கரை கீழப்புதூர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஹேமந்த் குமார்(30). சரக்கு வாகன ஓட்டுநரான இவர், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அரியமங்கலம் பகுதியிலுள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில், முன்விரோதம் கார ணமாக கீழப்புதூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபி கண்ணன்(32) தூண்டுதலின்பேரில், இக்கொலை நடைபெற்ற தாக தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, கோபிகண்ண னின் நண்பர்களான வரகனேரியைச் சேர்ந்த ரவுடி ஜாகீர்உசேன், ஆனந்த், பிச்சைமுத்து ரமேஷ், சுரேஷ், கிருபாகரன் ஆகியோரை அரியமங்கலம் போலீஸார் கைது செய்த னர். தலைமறைவாக இருந்த கோபிகண்ணனை திண்டுக்கல் பிள்ளையார்நத் தம் பகுதியில் போலீஸார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த வழக்கறிஞர் கோபிகண்ணன் நேற்றிரவு திருச்சி நீதிமன்ற காவல்நிலையம் வழியாக பீமநகர் செல்லும் சாலையில் தனது மகளுக்குச் சைக்கிள் ஓட்ட கற் றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்குவந்த ஒரு கும்பல் கோபிகண்ணனை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது. இதுகுறித்து நீதிமன்ற காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியமங்கலத்தில் நடைபெற்ற ஹேமந்த்குமார் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இக்கொலை நடைபெற்றுள்ளதாகவும், இதில் தொடர்புடை யவர்களைத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். நீதிமன்ற காவல்நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் நடைபெற்ற இக்கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT