Regional01

1.6 கிலோ நகையுடன் வந்த நகைக் கடை ஊழியரை காணவில்லை என புகார் :

செய்திப்பிரிவு

திருச்சி-கரூர் புறவழிச் சாலையில் அண்ணாமலை நகரில் தனியார் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை பார்த்து வந்த புத்தூர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மார்ட்டின் ஜெயராஜ்(45) என்பவரை புதிய நகைகள் வாங்குவதற்காக கடை நிர்வாகத்தினர் இரு தினங்களுக்கு முன் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து 1.6 கிலோ தங்க நகைகளை பெற்றுக் கொண்டு நேற்று முன்தினம் புறப்பட்ட மார்ட்டின் ஜெயராஜ் நேற்று வரை திருச்சிக்கு வந்து சேரவில்லை. அவரை செல்போனிலும் தொடர்புகொள்ள முடிய வில்லை.

இந்நிலையில் மார்ட்டின் ஜெயராஜை காணவில்லை என நகைக்கடை உரிமை யாளர் மதன், உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT